அவசரமாக வைத்தியசாலையில் சேர்கப்பட்ட ஈழ உணர்வாளர் அண்ணன் சத்திய ராஜ் அவர்கள்…

நடிப்பு எல்லாம் 2ம் பட்சம், நான் முதலில் தமிழனாக இருக்க விரும்புகிறேன். அதுவும் தலைவர் என்றால் அது எங்கள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்று ஏற்றுக் கொண்ட, தமிழ் உணர்வாளர் மற்றும் நடிகரான அண்ணன் சத்திய ராஜ் அவர்கள் 7ம் திகதி அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. அவருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில். சிகிச்சை பெற்று வருவதாகவும். அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். நாம் தொடர்பு கொண்டு , விசாரித்துள்ளோம். அத்துடன் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அவரது உடல் நிலையை தாம் நுணுக்கமாக கவனித்து வருவதாக வைத்தியர்கள் அதிர்வு இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்கள். அண்ணன் சத்திய ராஜ் அவர்கள் நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து தமிழர்களும் பிரார்த்தனை செய்வோமாக …

Contact Us