வைச்சு செய்யும் அன்ரூ: பிரித்தானியா அரச குடும்பமா கொக்கா ? பொய் செக்ஸ் வழக்காக மாற்றும் திட்டம் இதோ…. !

தான் 17 வயதாக இருக்கும் போது,  பெரும் செல்வந்தரான எப்ஸ்டினிடம் சிக்கிக் கொண்டதாகவும். அந்த வேளை அங்கு வந்த பிரித்தானிய இளவரசர் அன்ரூ தன்னை கற்பழித்ததாகவும் ஒரு தனிப்பட வழக்கை அமெரிக்காவில் தொடர்ந்துள்ளார்,  வேர்ஜீனியா என்ற பெண். சில தினங்களுக்கு முன்னரே அவர் $500,000 ஆயிரம் டாலர்களை இறந்த எப்ஸ்டினிடம் இருந்து  பெற்றுள்ளார் என்ற விடையம் வெளியாகி இருந்தது. இது அன்ரூ சார்பாக கொடுக்கப்பட்டு இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் அன்ருவின் பெயர் இல்லை. இது இவ்வாறு இருக்க, பிரித்தானிய அரசு, … இல்லை என்றால் உளவுத் துறை….  அதுவும் இல்லையென்றால் அரச குடும்ப பாதுகாவலர்கள்….  யாரோ ஒருவர் இந்த வழக்கை நீர்த்துப் போக படு…. பக்கா பிளான் ஒன்றை போட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அது என்ன தெரியுமா ?

தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒரு பெண் சென்று, வேர்ஜீனியாவிடம் கூறி உள்ளார். (சினிமா பட பாணி இது) அதனை நம்பிய வேர்ஜீனியா. அவரை வழக்கு வட்டத்தினுள் கொண்டு வந்துள்ளார். குறித்த பெண் எப்ஸ்டின் தொடக்கம் பலர் தன்னை கற்பழித்தாக கூறியுள்ளார். இதனை அடுத்து அவரையும் ஒரு சாட்சியாக வேர்ஜினியா அறிமுகப் படுத்தி இருந்தார். இதனால் அமெரிக்காவில் அந்தப் பெண் மிகவும் பிரபல்யமாகினார். ஆனால் தற்போது  பணத்திற்காக,  இவ்வாறு பொய் சொன்னதாக அந்தப் பெண் கூறி, வேர்ஜீனியாவை மண்…  கவ்வ வைத்துள்ளார். இதனால் வேர்ஜீனியா பக்க சாட்சிகள் எல்லாமே பொய்யானவர்கள். இவர்கள் அரச குடும்பத்திடம் காசு கறக்கவே இவ்வாறு நாடகம் ஆடுகிறார்கள் என்ற …ஒரு தோற்றம் தோன்றியுள்ளது.

இதனூடாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார் வேர்ஜீனியா. இதன் காரணமாக வழக்கை சிலவேளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் நிலை தோன்றலாம் என்று கூறப்படுகிறது. பிரித்தானியாவா கொக்கா ? எங்கள் நாட்டு இளவரசர் குற்றம் செய்திருந்தால் கூட, அவர் கெண்டைக் கால் ரோமத்தை கூட எவராலும் தொட முடியாது என்று காட்டியுள்ளது பிரித்தானியா. உண்மையில் பிரித்தானிய மாகாராணி, பல நாடுகளை அதள பாதாளத்தில் தள்ளி, அன் நாட்டு செல்வங்களை அள்ளி வந்து பிரித்தானியாவை கட்டி எழுப்பியவர். இதனால் அவர் நாட்டுப் பற்று என்பது , யாராலும் அளவிட முடியாத ஒன்றாக இன்று வரை கணிக்கப் படுகிறது. அது போல அரச குடும்பம் என்றால், அவர்களுக்கு நன்றிக் கடனாக , இருக்கும் பல்லாயிரம் மக்கள் இன்றுவரை உள்ளார்கள்.  அதுவரை மகாராணியை யாராலும் அசைக்க முடியாது. அதுவே உண்மை. தற்போது….

தற்போது மகாராணியின் மகன் அன்ரூவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, மிகவும் பிசு பிசுத்துப் போய் உள்ளது. அது தான் உண்மை நிலை.

Contact Us