“நீதி வென்றது!”…. துரத்தி துரத்தி…. கொடூரமாக கொல்லப்பட்ட கருப்பின இளைஞர்…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருப்பின இளைஞரான அஹ்மது ஆர்பெரி ( வயது 25 ) என்பவரை ஜீப்பில் துரத்திச் சென்று கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து ஆர்பெரியை விரட்டி சென்ற வில்லியம் பிரான் என்பவர் அந்த சம்பவத்தை வீடியோவாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

பின்னர் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகள், ஆர்பெரியை திருடன் என நினைத்து சுட்டுக் கொன்றதாக விவாதத்தை முன் வைத்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Contact Us