மனைவி மற்றும் பிள்ளையை கொன்றுவிட்டு தப்பிய நபர்… பிரான்சில் சம்பவம்

பிரான்சின் ஒபேவில்லியே பகுதியில் மனைவி மற்றும் பிள்ளையை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதாகியுள்ளார்.

ஒபேவில்லியே பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமையில் குறித்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

29 வயது பெண் ஒருவரும் அவரது 2 வயதுக் குழந்தையும் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்ணின் கணவர் 29 வயது நபர் சம்பவப்பகுதியில் இருந்து தப்பிச்செல்ல, வாகன விபத்தில் சிக்கியிருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ள அந்த நபரிம் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இதனால் கொலைக்கான காரணங்கள் தொடர்பில் பொலிசாருக்கு இன்னமும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

படுகொலை நடந்த வேளையில் அந்த கணவரின் தங்கையும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். இவர் மீதும் கொலை முயற்சி நடந்தவேளையில், இரத்த காயங்களுடன் ஜன்னல் வழியாக குதித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அவர் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் ஜன்னல் வழியாக குதித்ததைக் கண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் அண்டை வீட்டார் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே இரட்டைக் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Contact Us