கொழும்பில் 33 பெண்களை அதிரடியாக கைது செய்த பொலிஸார்

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்திய விருந்து ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

களனி பிரிவு குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரம் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Contact Us