“காபியில் மயக்க மருந்தை கலந்து..” காபி ஷாப்புக்குள் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சலபத்புராவில் உள்ள பிளாஸ்டிக் பை தொழிற்சாலையில் ஒரு 16 வயதான பெண் வேலைக்கு சேர்ந்தார் .அங்கு அவரின் தாயாரும் வேலை பார்த்து வருவதால் அந்த பெண்ணுக்கு அங்கு வேலை கிடைத்தது .இந்நிலையில் அந்த நிறுவனத்தில் நிகில் என்ற ஒரு வாலிபர் அந்த பெண்ணுக்கு ஆசை வலை விரித்தார் .அதனால் அந்த பெண் இது பற்றி தன் தாயாரிடம் கூறியபோது, அவர் அந்த நிகிலுடன் பழக வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனில் மற்றும் சோனால் ஆகிய இரு சக ஊழியர்களும் ஜனவரி 3ம் தேதி அங்குள்ள ஒரு காபி ஷாப்புக்கு கூட்டி சென்றனர் .அப்போது அந்த இருவரும் அந்த பெண்ணுக்கு காப்பியில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் அவர் மயங்கி விழுந்தார் .அப்போது அங்கு வந்த நிகில் அந்த காபி ஷாப்பில் உள்ள ஒரு அறையில் அடைத்து அந்த பெண்ணை மயங்கிய நிலையில் பலாத்காரம் செய்து விட்டு போய் விட்டார் .பின்னர் வீட்டுக்கு வந்த மகளின் உடையில் இருந்த கறைகளை பார்த்த அவரின் தாய் கேட்ட போது ,அந்த பெண் நிகில் மூலம் தனக்கு நடந்த கொடுமையை கூறினார் .அதன் பின்னர் அவர்களிருவரும் நிகில் மீது போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து அந்த நிகில் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்தனர்

Contact Us