மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது

உடுமலைப்பேட்டை அருகே உள்ள கரட்டுமடம் என்ற ஊரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு தமிழ் ஆசிரியராக இருப்பவர் அசோக்குமார், இவர் அப்பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தியதில், இவர் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளையும், ஆபாச படங்களையும் அனுப்பியது தெரியவந்தது. இதனை அடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு இப்பிரச்சினையை தொடர்புடைய ஆசிரியரை விசாரித்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதுபோல் வேறு மாணவிகள் யாருக்காவது அசோக் பாலியல் தொல்லை கொடுத்தாரா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Contact Us