“அடக்கடவுளே!”…. மனைவி குழந்தைன்னு ஈவு இரக்கமில்லாம…. துடிக்க துடிக்க…. கணவர் செய்த கொடூரம்…. பிரான்ஸை அதிர வைத்த சம்பவம்….!!!!

பிரான்ஸில் பெண்ணொருவர் ரத்த காயங்களுடன் ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மேலும் இதுதொடர்பான தகவலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகளை கண்ட நபரொருவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் வாகன விபத்தில் சிக்கியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளார்கள்.

அதன் பின்புதான் பகிரங்க உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்த நபர் தன்னுடைய 29 வயதுடைய மனைவியையும், இரண்டு வயது குழந்தையையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதற்கிடையே முன்னதாக ஜன்னல் வழியாக இரத்தக் காயங்கள் குதித்த அந்த பெண் இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபரின் தங்கை என்று தெரியவந்துள்ளது.

Contact Us