பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான புதைபடிவமான “கடல் டிராகன்” என்று விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர்.

குறித்த கடல் டிராகன் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. மேலும் அவை 82 அடி (25 மீட்டர்) வரை வளரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவை முதல் ichthyosaurs, கடல் டிராகன்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை மிகப் பெரிய பற்கள் மற்றும் கண்களைக் கொண்டிருக்கின்றன, 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புதைபடிவ வேட்டைக்காரர் மற்றும் பழங்கால ஆராய்ச்சியாளர் மேரி அன்னிங் (Mary Anning)என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இனத்தை ஆய்வு செய்த பழங்கால ஆராய்ச்சியாளர் டாக்டர் டீன் லோமாக்ஸ் கூறியது, பிரித்தானியாவில் பல இக்தியோசர் புதைபடிவங்கள் காணப்பட்டாலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு ரட்லாண்ட் இக்தியோசர் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது உண்மையிலேயே முன்னோடியில்லாத கண்டுபிடிப்பு மற்றும் பிரிட்டிஷ் பழங்கால வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.”

Contact Us