முள்ளியவளையில் நேற்றிரவு பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்…

முள்ளியவளை முறிப்பு பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (09-01-2022) இரவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் 42 வயதுடைய தெய்வேந்திரம் புவனேந்திரராசா, எனபவரே படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, குமுழமுனை வீதி முறிப்பு பகுதியில் வீட்டில் வசித்துவந்த வேளை வீட்டிற்குள் புகுந்த நபர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது, படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Contact Us