ஏழைகள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து…. வெளியேற மறுக்கும் மக்கள்…. சிலி நாட்டில் பரபரப்பு….!!!

.

சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டு, 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானது. எனவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியிருக்கிறது.

இந்நிலையில், அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனினும், நல்லவேளையாக இக்கொடூர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குடியிருப்புவாசிகள், தங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

Contact Us