பொறிஸ் ஜோன்சனை பொலிசார் அழைத்து விசாரிக்க உள்ளார்கள் ? இலக்கம் 10 நடந்த பார்ட்டி தொடர்பாக மேலும்…

கடந்த 2020 மே மாதம், கொரோனா பிரித்தானியாவில் உச்சம் தொட்டவேளை. பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் ஒரு கழியாட்ட தண்ணிப் பார்டி இடம்பெற்றுள்ளது. இதற்காக சுமார் 100 பேரை பிரதமரின் பிரத்தியேக செயலாளர் அழைத்த விடையம் தற்போது கசிந்துள்ளது. அவர் அனுப்பிய மின்னஞ்சலை யாரொ பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ள நிலையில். லட்சக் கணக்கான மக்கள் இதுவரை இறந்துள்ள நிலையில். பிரதமர் எப்படி 100 பேருடன் பார்டி ஒன்றை கொண்டாட முனைந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதனை அடுத்து கசிந்துள்ள மின்னஞ்சல் பிரதிகள் தொடர்பாக பொறிஸ் ஜோன்சனை விசாரிக்க பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று, பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில்…

பொலிசார் இது தொடர்பாக எந்த ஒரு அறிவித்தலையும் முன் வைக்கவில்லை. இருப்பினும் பொலிசாருக்கு எதிர்க் கட்சி சார்பாக பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பொறிஸ் ஜோன்சன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் மீது பொலிஸ் விசாரணைகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

Contact Us