செக்ஸ் பேஜை மோபைலில் பார்த்துக் கொண்டு ஓடி: 3 பேரைக் கொன்ற றொமேனிய ஓட்டுனர் இவர் தான் !

றொமேனியா நாட்டைச் சேர்ந்த ஒன்லெட் என்னும் ஓட்டுனர், 60 மைல் வேகத்தில் கன ரக வாகனத்தில் பயணித்தவேளை. பிரித்தானியாவின் டூரஹாம் நகரில் உள்ள சாலை ஒன்றில் வாகன நெரிசல் காரணமாக நின்ற கார் மீது மோதி 3 பேரைக் கொன்றார். அவர் தனது கனரக வாகனத்தை ஓட்டும் போது கையில் மோபைல் போனை வைத்திருந்துள்ளதோடு. அதில் பெண்களை தேடும் ஆபாச வலையத் தளம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டு வாகனத்தை ஓட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் பார்வை மோபைல் போன் மேல் இருந்ததால், வீதியில் நின்ற கார்களை அவர் கவனிக்க தவறி விட்டார். இந்த விபத்து கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்றது. இதனை அடுத்தே பிரித்தானிய பொலிசார் கார் ஓட்டும் போது, கையில் மோபைல் போனைத் தொட முடியாது என்ற இறுக்கமான சட்டத்தை கொண்டு வந்தார்கள். இன் நபருக்கு நேற்றைய தினம்(11) தான் …

தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 வருட சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் உறவினர்கள் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போது என்று போர் கொடி தூக்கியுள்ளார்கள். கீழே வீடியோ இணைப்பு.

Contact Us