“இரவு நேர ஊரடங்கில் உறவுக்கு அழைத்த ஆட்டோ ட்ரைவர்” -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிற்று கிழமை இரவு சண்டிகரில் உள்ள செக்டார் 17ல் உள்ள தன் தோழியை சந்திக்க வந்தார் ,அப்போது அவர் வீட்டில் இல்லாததாலும் அவரை தொடர்பு கொள்ள தன்னிடம் அவரின் போன் நம்பர் இல்லாததாலும் அவர் அங்கிருந்து டெல்லிக்கு செல்ல முடிவெடுத்து ,ஆட்டோவுக்காக சாலையில் காத்திருந்தார் .அப்போது அந்த ஊரில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் ,போக்கு வரத்து இல்லாமல் ஊரே அமைதியாக இருந்தது

அப்போது தருவா கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெய் தேவ் என்ற ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்ணை தான் கூட்டி செல்வதாக கூறி தன்னுடைய ஆட்டோவில் கூட்டி சென்றார் .

அப்போது அந்த ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு ,பாலியல் உறவுக்கு அழைத்தார் .இதனால் அந்த பெண் பயந்து போய் கத்த முயற்சித்ததும் ,அந்த ஜெய் சேவ் அந்த பெண்ணை கொலை செய்வதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டார் .அதன் பிறகு அந்த பெண் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம் இது பற்றி கூறியதும் ,போலீசார் விசாரணை நடத்தி அந்த ஆட்டோ ட்ரைவரை கைது செய்தனர் .

Contact Us