பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் தொடர்பில் சர்ச்சை!

பிரித்தானியாவில் முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்த விருந்துபசாரத்தில் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் (Boris johnson) ஒருவர் என்றும் கூறப்படுகின்ற நிலையில் அவர் இதுதொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. எனினும் விருந்துபசாரம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, இதுதொடர்பாக பிரித்தானிய பிரபுகள் சபையில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us