ஓமிக்ரோன் தொற்றின் புதிய அறிகுறிகள்.. உடனே என்ன செய்யவேண்டும்?

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவ மறுபக்கம் டெல்டா, மற்றும் ஓமிக்ரோன் போன்ற வைரஸ் பரவி வருகின்றன. இந்த ஓமிக்ரோன் வைரஸ் ஆனது சுவாச செயல்முறையை பாதிப்பதுடன் நோயாளியின் வயிற்றையும் பாதிக்கிறது.

இதன் காரணமாக, வயிற்று வலி, குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. மேலும், இந்த அறிகுறிகள் இருந்தால், இவற்றை சாதாரண காய்ச்சலைப் போல் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக கோவிட் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஓமிகரோன் அறிகுறிகள் (Omicron symptoms)

காய்ச்சலின்றி வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும்,.
சுவாச அறிகுறிகள் அல்லது காய்ச்சல் இல்லாமல் வயிறு தொடர்பான இந்த பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் கொரோனா பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
சிலருக்கு ஆரம்பத்தில் சளி, ஜலதோஷம் இல்லாமல் வயிற்றுப் பகுதியில் மட்டும் அசௌகரியம் ஏற்படும்.
மேலும், முதுகுவலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் இதில் அடங்கும்.
செய்யவேண்டியவை

ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தூய்மையை பராமரிப்பது மிக அவசியமாகும்.
புதிதாக சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.
இதைத் தவிர, உணவைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். வெளி உணவைச் சாப்பிடக் கூடாது.

Contact Us