செக்ஸ் மாபியா குழுவான முன்னணி பிரபலங்கள் – அரசியல் பிரமுகரின் பெயரும் கசிந்தது

செக்ஸ் மாபியா குழுவுடன் திரையுலக முன்னணி பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், முக்கியமான அரசியல் பிரமுகருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று பரபரப்புத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. நடிகை பாவனாவின் கடத்தல் வழக்கில் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.

பிரபல நடிகை பாவனா கடந்த 2017ஆம் ஆண்டில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பல்சர் சுனில் இப்போதும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் நடிகர் திலீப் 74 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

நடிகையை கடத்தியதில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை தனக்குத் தெரியாது என்று சாதித்து வந்தார்கள். அப்போது தீர்ப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை . இதனால் தவறு தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்த திலீப்புக்கு தற்போது ஒரே அதிர்ச்சி. அவரின் நெருங்கிய நண்பராக இருந்த இயக்குனர் பாலசந்திர குமார், திலீப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார்.

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உருத்துகிறது என்று அவர் உண்மையை சொல்லி இருப்பதாகக் கூறியிருக்கிறார். பாவனா தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்ததையடுத்து பாலசந்திரகுமார் உண்மையை சொல்லி இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

அண்மையில் பால சந்திரகுமார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பல்சர் சுனியை தனக்குத் தெரியாது என்று சொல்லித்தான் ஜாமீன் பெற்றார். ஆனால் திலீப்பும் பல்சர் சுனியும் ஒன்றாக அமர்ந்து பேசியதை நான் பார்த்திருக்கிறேன். திலீப்பின் வீட்டில் வைத்து தான் நான் அவர்கள் இருவரையும் பார்த்தேன். பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அதிகாரி கொண்டு வந்து கொடுத்தார். அந்த வீடியோவை போட்டு பார்த்தார் திலீப். அப்போது நான் அங்குதான் இருந்தேன் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

இதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கேரள மாநில நுண்ணறிவு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதை தெரிந்துகொண்ட உடனே பதறிப்போய் இதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார் திலீப் . இந்த மனு வரும் 20-ம் தேதி அன்று பரிசீலனைக்கு வருகிறது . இந்த நிலையில் பாலியல் அத்துமீறல் வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட எஸ்பி மற்றும் சுதர்சன் டி எஸ் பி கே பவுலோஸ் ஆகியோரை பழி தீர்ப்பதற்காக இதயத்திலே கூலிப்படையை ஏவிய முயற்சி செய்ய திட்டமிட்டதாகவும் பாலசந்திரகுமார் சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் 6 மணி நேரம் சந்திரகுமார் இடமிருந்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. மதியம் ஒன்று முப்பது மணிக்கு தொடங்கிய இந்த ரகசிய வாக்குமூலம் மூலம் நடவடிக்கைகள் மாலை ஏழு முப்பது மணி வரைக்கும் இருந்திக்கிறது. இந்த ரகசிய வாக்குமூலத்தில் நடிகர் சந்திரகுமார் பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மிக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரையும் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பல்சர் சுனி தனது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் மலையாள நட்சத்திரங்களின் மோசடியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நிலையில் பல்சர் சுனியின் கடிதம் ஒன்று கசிந்திருக்கிறது . மலையாள நட்சத்திரங்களின் பாலியல் மோசடி தொடர்புகளைப் பற்றி இந்த கடிதம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. திலீப்புக்கும் நடிகை பாவனாவின் பாலியல் மோசடிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்லி அந்த கடிதத்தில் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும், பாலியல் ஆதாயத்திற்காகத்தான் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை திலீப் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மலையாள முன்னணி பிரபலங்கள் செக்ஸ் மாபியா குழுவின் ஒரு பகுதியாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Contact Us