முக்கியமான பேச்சு நடத்தவிருக்கும் சூழலில் பதற்றத்தைத் தூண்டியுள்ள ரஷ்யா!

நேட்டோ அமைப்புடன் முக்கியமான பேச்சு நடத்தவிருக்கும் சூழலில், ரஷ்யா பதற்றத்தைத் தூண்டியுள்ளது. உக்ரேன் எல்லைக்கு அருகே கவச வாகனங்களையும் படையினரையும் நிறுத்தியுள்ள ரஷ்யா, ஐந்து சுற்று நேரடிப் பயிற்சியை நடத்தியுள்ளது.

உக்ரேன் எல்லையில் உள்ள சுமார் நூறாயிரம் படையினரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் ன் ரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.

அதன் பிறகும், உக்ரேன் எல்லையில் மாஸ்கோ நேரடிப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

ரஷ்யா ஊடுருவ முயல்வதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

திங்கட்கிழமை பேச்சுவார்த்தையில் நம்பிக்கைக்குரிய அம்சம் ஏதும் இல்லை என்று கிரெம்ளின் மாளிகையின் பேச்சாளர் கூறினார்.

ரஷ்யா நடத்தியுள்ள நேரடிப் பயிற்சிகள், பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு மாற்றமானவை என்று அமெரிக்க வெளியுறவுத் துணையமைச்சர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) கூறினார்.

உக்ரேனை ஊடுருவும் திட்டம் ஏதுமில்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

Contact Us