இரண்டாக உடையும் ஆபிரிக்க கண்டம் சோமாலியா நாடு இந்தியா நோக்கி நகர்கிறது !

இரண்டாக உடையும் ஆபிரிக்க கண்டம் சோமாலியா நாடு இந்தியா நோக்கி நகர்கிறது !

உலகின் 2வது மிகப் பெரிய கண்டமாக கருதப்படும் ஆபிரிக்கா, 2டாக உடைய ஆரம்பித்துவிட்டது. சோமாலியா நாட்டோடு உடைய ஆரம்பித்துள்ள இந்த தகடு, ஆபிரிக்க தகட்டில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 7மில்லி மீட்டர் என்ற வேகத்தில் பிரிந்து செல்ல ஆரம்பித்துள்ளது. முற்று முழுதாக உடைந்து பிரிந்து செல்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது என்றாலும். இதனை மனித குலத்தால் தடுத்து நிறுத்த முடியாது.

எதியோப்பியா, கென்யா, சொமாலியா, தன்சானியா மொசாம்பிக், மற்றும் சம்பியா நாட்டில் பாதி, சிம்பாபே நாட்டில் பாதி என்று இத்தனை நாடுகளும் ஆபிரிக்காவில் இருந்து பிரிந்து செல்ல உள்ளது. அதிலும் இந்த தகடானது இந்தியா நோக்கி நகர்ந்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விடையம்.

ஏற்கனவே சுமார் 6,000 ஆயிரம் மைல் நீளமான பெரும் வெடிப்பு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ளது. எனவே சோமாலியா மற்றும் மடகஸ்கர் தீவு என்று ஆபிரிக்காவில் இருந்து பிரிந்து விலகிச் செல்ல உள்ளது. இதனால் விலகிய இடத்தில் கடல் நீர் புகுந்து, புது கடல் பரப்பு ஒன்று உருவாக உள்ளது. இதனால் உலக வரை படத்திலேயே மாற்றம் ஒன்று உருவாக உள்ளது. இது இவ்வாறு இருக்க பிரிந்து செல்லும் பகுதியானது இந்தியா நோக்கி நகர உள்ளது.

ஆனால் பல்லாயிரம் வருடங்களின் பின்னரே இது இந்தியாவுக்கு அருகே வரும் என்று கூறப்படுகிறது. அப்போது இதனைப் பார்க்க மனித குலம் உயிருடன் இருக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த தகடு இந்திய துனைக் கண்டத் தகட்டுடன் மோதி பெரும் சுணாமி அலை ஒன்றை தோற்றுவிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.