
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து பின்னர் நேஷனல் கிரஷ் என வளர்ந்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
அதன் பின்னர் தெலுங்கில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் தேவர்கொண்டாவை ரகசியமாகக் காதலித்து வந்தார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமாகிவிட்டார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது சேலையில் வெண்ணை கட்டி வெட்டி வச்சது போன்று அவ்வளவு கியூட்டாகப் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.


