
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை “மலைக்கா அரோரா”. தமிழில் ஷாருகான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் வரும் “தைய தைய” பாடலுக்கு நடனமாடி பேமஸ் ஆனார். அதன் பின் பாலிவுட்டில் சில படங்கள் நடித்துள்ளார்.
1998 ல் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் என்பரை திருமணம் செய்து கொண்டார். பின் திருமணமான 19 ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டார். தற்போது போனி கபூரின் மகனுடன் ரிலேஷன்ஷிப்பிலிருந்து வருகிறார்.
சமீபமாகச் சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் அரோரா. அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.இந்நிலையில் தற்போது வெள்ளை நிற சேலையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.


