சொன்னது போலவே பல இடங்களில் டோரி கட்சி படு தோல்வி- ரிஷி சுண்ணக் நிலமை மோசமடைந்துள்ளது

சொன்னது போலவே பல இடங்களில் டோரி கட்சி படு தோல்வி- ரிஷி சுண்ணக் நிலமை மோசமடைந்துள்ளது

ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டது போல, நாடு தழுவிய ரீதியில் ஆளும் டோரிக் கட்சி கவுன்சில் எலக்ஷனில் படுதோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே கைப்பற்றி தக்க வைத்திருந்த பல கவுன்சிலர்கள்(டொரிக் கட்சி) பலர் கவுன்சிலர் பதவிகளை இழந்துள்ளார்கள். இந்த இடங்களை எதிர்கட்சியான லேபர் கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுண்ணக்கிறகு பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக உடனடியாக பல நிவாரனங்களை ரிஷி மக்களுக்கு அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் லேபர் கட்சியே பெருவாரியாக வெற்றிபெறும் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது உண்மையா என்று நாடி பிடித்து பார்கவே இந்த தேர்தல் உறுதுனையாக இருந்தது. ஆனால் ஆம் அது உண்மை தான் என்றாகிவிட்டது. தற்போது பிரிட்டம் மக்கள், ஆளும் டோரி கட்சி மீது, மிகவும் அதிருப்த்தியில் உள்ளார்கள்.

வாழ்கைச் செலவு அதிகரித்துள்ளது, பொருட்களின் விலை அதிகரிப்பு, VAT அதிகரிப்பு, வட்டி விகிதம் பன் மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோல் விலை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் பிரித்தானியாவில் சாதாரண குடும்பம் வாழவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. செல்வந்தர்களும் , சுய தொழில் புரிபவர்களும் மேலும் மேலும் வளர்ந்து செல்ல, நடுத்தர வர்க மக்கள் மட்டும் , மீளமுடியாத நிலையில் உள்ளார்கள். ஒரு வகையில் அன்னாடம் காட்சிகளாகவே மக்கள் மாறிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்த மாதம் உழைக்கும் காசு, அந்த மாத செலவுக்கே கழிய சரியாக இருக்கும். எதுவும் மிச்சப்படுத்த முடியாது. இது தான் இன்றைய பிரித்தானியாவின் நிலையாக உள்ளது.

Source : https://www.dailymail.co.uk/news/live/article-13376967/uk-local-elections-2024-live-votes-results.html