
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2009ஆம் ஆண்டு முதல் திரையுலகிலிருந்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்துள்ளார். 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்துத் தனது திரைப்பயணத்தை தொடங்கி முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். இவர் இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மஞ்சள் நிற கர்ஜியஸ் உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறான ரசனையில் மூழ்கடித்துள்ளார்.


