US-கொடுத்த ஏவுகணையை பாவித்து உக்ரைன் அட்டாக் 110 ரஷ்ய ராணுவத்தினர் ஸ்தலத்திலேயா பலி !

US-கொடுத்த ஏவுகணையை பாவித்து உக்ரைன் அட்டாக் 110 ரஷ்ய ராணுவத்தினர் ஸ்தலத்திலேயா பலி !

அமெரிக்கா கொடுத்த நெடுந்தூர ஏவுகணையை பாவித்து, ரஷ்யாவில் உள்ள தளம் ஒன்றை உக்ரைன் துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. MGM144 என்ற இந்த அதி நவீன ஏவுகணையின் விலையை கேட்டால் தலையில் கை வைக்கத் தோன்றும். ஒன்றின் விலை 8லட்சம் அமெரிக்க டாலர் ஆகும்(800,000USD).

குறித்த ஏவுகணை, 13 அடி நீளமானது சுமார் 300KM வரை சென்று துல்லியமாக தாக்க வல்லது. அதுபோக இது விழுந்து வெடிப்பது அல்ல. வானில் வைத்தே பல நூறு குண்டுகளாகப் பிரிந்து பின்னர் இலக்கை தாக்க ஆரம்பிக்கும். இதனால் பெரும் சேதம் ஏற்படும். இந்த ஏவுகணையைத் தான் உக்ரைன் தற்போது பாவித்துள்ளது.

பக் காம்பிளக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரஷ்ய தளம் முற்றாக அழிந்துள்ளதோடு. ஏவுகணைத் தளமும் முற்றாக அழிக்கபப்ட்டுள்ளது. மொத்தமாக 100க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவம் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்கா கொடுத்துள்ள அதி நவீன ஏவுகணைகளை பாவித்து ரஷ்யா மேலும் பல தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.