
சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலே பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பிரியா அட்லீ. இவர் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்துப் பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். சில படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் அட்லீயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்ட பிரியா அண்மையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதனிடையே அட்லீயின் ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து ரூ. 1000 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருந்தது . இந்நிலையில் பிரியா கணவர் அட்லீ மற்றும் மகன் எனக் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு,
எனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்… ஒவ்வொரு விஷயத்திற்கும் உன்னை நேசிக்கிறேன், சாத்தியமான எல்லா வழிகளிலும் என் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. MEER என்மீதான உங்களின் அன்புடன் ஒத்துப்போவதில் மிகவும் கடினமான நேரம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
லவ் யூ ஃபார் வாட் எவர் யூ ஆர் அட்லீ. என்னால் முடிந்த அளவு உன்னை நேசிப்பதாகவும், எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தருவதாகவும் உறுதியளிக்கிறேன். லவ் யூ மை அட்லீ , லவ் யூ அண்ட் லவ் மினி யூ (MEER) எனப் பதிவிட்டு அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்திருக்கிறார். இந்த அழகான குடும்பத்திற்கு அனைவரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.


