தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான Trisha Krishnan குறித்து கடந்த சில நாட்களாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார், ஒரு பணக்காரரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்துகிறார் போன்ற தகவல்கள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து தனது Instagram Story-யில் அவர் கிண்டலாக பதில் அளித்தார். “நான் படங்களை விட்டுவிட்டேன், பணக்காரரை திருமணம் செய்துகொண்டேன், நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடிய நான்கு குழந்தைகளையும் வளர்த்து கொண்டிருக்கிறேன்… இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி பரவும் தகவல்களை மறுத்துள்ளார். இந்த பதிவு மூலம் வதந்திகளை அவர் நேரடியாக சாடியுள்ளார்.
திரிஷாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. அவர் சினிமாவை விட்டு விலகவில்லை என்றும், தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அவரது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ரசிகர்களுக்கு தெளிவாகியுள்ளது.