பிரித்தானியாவின் 10 முக்கிய அமைச்சர்கள் MP பதவிகளை இழந்து விட்டார்கள் – கான்சர் வேட்டிவ் கட்சி படு தோல்வி !

பிரித்தானியாவின் 10 முக்கிய அமைச்சர்கள் MP பதவிகளை இழந்து விட்டார்கள் – கான்சர் வேட்டிவ் கட்சி படு தோல்வி !

பிரித்தானியாவின் 10 முக்கிய அமைச்சர்கள் நடந்து முடிந்த தேர்தலில் MP பதவிகளை இழந்துள்ளார்கள். அந்த இடங்களில் லேபர் கட்சி வேட்ப்பாளர்கள் ஆயிரக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். பிரதமர் ரிஷி சுண்ணக், அரும் பொட்டில் மீண்டும் MP ஆகியுள்ளார். இதேவேளை முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த சுலைலா பேர்வமான், மீண்டும் MP ஆக தெரிவாகியுள்ளார். இது இவ்வாறு இருக்க,

இம் முறை இனவாதக் கட்சி வேட்ப்பாளர் நைஜில் பராக், 18 வருடங்களின் பின்னர் வெற்றியடைந்துள்ளார். பிரிட்டன் வெள்ளை இன மக்களுக்கே சொந்தம். ஏனைய கருப்பின மக்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற கொள்கையோடு , நைஜில் பராக REform UK என்ற கட்சியை ஆரம்பித்தார். கடும் இன வாதக் கட்சி இம் முறை 2 MP ஆசனங்களை வென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் லேபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன் நாள் லேபர் தலைவர் ஜெருமி, சுயேட்சையாக போட்டியிட்டு பெரும் வெற்றியடைந்துள்ளார்.