துபாயில் பறக்க்ம் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றிப்பெற்றுள்ளதாக அநாட்டு இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
துபாயில் பஸ், டாக்ஸி, மெட்ரோ மற்றும் படகு என போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து சேவையில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த 2-24ம் ஆண்டு துபாய் போக்குவரத்து ஆணையம் அமெரிக்காவின் விமான நிறுவனமான ஜோபியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டது. அதில் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை துபாயில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதன்படி, இ-விடோல் என்ற மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை செயல்பாட்டுக்கு கொண்டுவர அமெரிக்க நிறுவனம் பரிந்துரைத்தது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பறக்கும் டாக்ஸி பார்வைக்கும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலைவன பகுதியில் முதற்கட்டமாக பறக்கும் டாக்சி சேவையின் சோதனை ஓட்டம் நடதது. இதற்காக அங்கு தனி மைதானமும் அமைக்கப்பட்டது. பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டத்தில் அமர்ந்த ஜோபி நிறுவன அதிகாரி, டாக்சியின் செயல்பாடுகளை விவரித்து பேசினார்.
துபாயில் முதல்முறையாக பறக்கும் டாக்சி சேவையை விமானி ஒருவர் வெற்றிகரமாக நிகழ்ச்சி காட்டினார். வானத்தில் வட்டமடித்த பறக்கும் டாக்சியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்த புதிய தொழில்நுட்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.