ஈரானுடன் போர் முடிந்த கையோடு, தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கு உலகின் கவனம் வட கொரியா மீது திரும்பியுள்ளது. வட கொரியா படு பயங்கரமான ஆயுதங்களை தயாரித்து வருவதாக பிரிட்டன் குற்றம்சாட்டி தனது போர் கப்பலை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. வாருங்கள் விரிவாகப் பார்கலாம்.
டோக்கியோ/லண்டன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட கொரியா மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வட கொரியா தனது ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அமல்படுத்தும் நோக்கில், HMS Spey என்ற பிரிட்டிஷ் கப்பல், ஜப்பானிய கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து ஜப்பான் கடலில் (கிழக்கு கடல் என்றும் அழைக்கப்படுகிறது) கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கப்பல்கள் கண்காணிப்பு:
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையுடன் இணைந்து செயல்பட்ட HMS Spey கப்பல், பியோங்யாங் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறுவதாகச் சந்தேகிக்கப்படும் வட கொரியக் கப்பல்களைக் கண்காணித்தது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் ஆயுதப் பெருக்கம் மூலம் தனது நாட்டிற்கு வருவாயை ஈட்டி வருவதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க கடல்சார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பின்னர் ஐக்கிய நாடுகளின் கட்டளை மையத்திற்கு (United Nations Command) அனுப்பப்பட்டன.
பிராந்திய பாதுகாப்பிற்குப் பங்களிப்பு:
ராயல் கடற்படை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. “Exercise Bersama Shield 2025” என்ற பயிற்சிக்கு 148வது பேட்டரியின் (148 Battery ashore) பணியாளர்கள் onboard செய்யப்பட்டுள்ளனர். இது பிராந்தியத்தில் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
இந்தக் கண்காணிப்பு ரோந்துப் பணிக்குப் பிறகு, HMS Spey ஜப்பானில் உள்ள சசெபோ கடற்படைத் தளத்தில் (Sasebo Naval Base) நங்கூரமிட்டது. அங்கு ஐக்கிய ராஜ்ஜியம், ஜப்பான் மற்றும் அமெரிக்கக் கடற்படைகளின் பல மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இது மூன்று நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கான உறுதியை எடுத்துக்காட்டுகிறது.