Posted in

மழையின் தாண்டவம். வெள்ளப்பெருக்கில்13 பேர் பலி, 20 குழந்தைகள் மாயம்

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

தென் மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. கேர் கவுண்டி ஷெரிப் லாரி லீதா, 13 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் கோடைக்கால முகாமுக்குச் சென்ற சிறுமிகள் ஆவர். கேம்ப் மிஸ்டிக் என்ற முகாமில் இருந்த சுமார் 23 சிறுமிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று துணை ஆளுநர் டான் பேட்ரிக் தெரிவித்துள்ளார். வெள்ளம் முகாமின் கட்டிடங்களை அடித்துச் சென்றுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.