ராகம, கந்தானை, வத்தளை ஆகிய பகுதிகளில் நேற்று (ஜூலை 4) இரவு முதல் இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தப் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு முதல் அனைத்து வீதிகளிலும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டு வருகின்றனர்.