செம்மணியில் தோண்டத் தோண்ட மனித எச்சங்கள் வருகிறது. ஆனால் சிங்கள ஊடகங்களில் இவை அனைத்துமே இருட்டடிப்புச் செய்யப்பட்டு வரும் நிலையில். தற்போது சிங்கள ஊது குழலாக செயல்படும், மற்றும் யாழ் காவாலி அருண் சித்தார்த் , புலிகள் படு கொலை செய்து புதைத்த இடத்தை தோண்ட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம்: இலங்கையின் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் இன்று (ஜூலை 4) வலியுறுத்தியுள்ளார். இது செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தைப் போலவே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த பகீர் தகவல்களை வெளியிட்டார்.
பவானி குளம், சிவபுரத்தில் நடந்த கோரக் காட்சிகள்!
குறிப்பாக, 1990களில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சித்திரவதை முகாம் குறித்த திடுக்கிடும் தகவல்களை அருண் சித்தார்த் அம்பலப்படுத்தினார். இந்த முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் ஆகிய பகுதிகளில் எரியூட்டப்பட்டு, சாம்பல் நீரில் கரைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணையில் முட்டுக்கட்டை?
இலங்கை இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அருண் சித்தார்த், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத ஒரு நிலை நீதிமன்றங்களில் நிலவுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள பெரும் சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாகவும், இதற்கு ஒரு முறைசாரா அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நீதிக்கான அழுகுரல்!
“நீதி விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சந்தேகங்களும் ஐயங்களும் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கு உண்மை தெரியவர வேண்டும்” என்று அருண் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான இந்த குற்றச்சாட்டுகள், இலங்கை யுத்தத்தின் இருண்ட பக்கங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரம் சர்வதேச அரங்கிலும் பேசுபொருளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.