Posted in

ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துத் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

முன்னதாக, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில், அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது குறித்த பிரித்தானிய அரசின் நிலைப்பாடு பற்றி, அந்த நாட்டின் நாடாளுமன்றில் எழுத்துப்பூர்வமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தாம் வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.