Posted in

லட்சக் கணக்கில் ட்ரோன்களை சப்பிளை செய்ய முடியும்: உக்ரைன் அதிபர்

பொதுவாக ஒரு நாடு யுத்தத்தில் ஈடுபட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்கும். இதற்கு நல்ல உதாரணம் இலங்கை. 45 பில்லியன் டாலர்கள் கடனில் உள்ளது. ஆனால் உக்ரைன் அப்படி அல்ல. அவர்கள் புதிது புதிதாக பல ஆயுதங்களை கண்டு பிடித்து அதனைப் பாவித்து வெற்றியடைந்தது மட்டுமல்லாது. உலகிற்கே எடுத்துக் காட்டாக மாறிவிட்டார்கள். வெறும் கல்யாண வீடு, பிறந்த நாள், மற்றும் விழாக்களில் பயன்படுத்தும் ட்ரோன்களை, தாக்குதல் விமானங்களாகவும், மிகவும் துல்லியமாக வேவு பார்க்கும் விமானங்களாகவும் மாற்றியுள்ளது உக்ரைன்.

தற்போது ட்ரோன் விமானங்களில் PHD பட்டப் படிப்பை முடித்தது போல, பல லட்சம் ட்ரோன்களை தயாரிக்க வல்ல நாடாக மாறியுள்ளது உக்ரைன். மேலும் சொல்லப் போனால், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் லட்சக் கணக்கில் ட்ரோன்களை தயாரித்து வழங்க ஒரு ஒப்பந்தத்தில் நேற்றைய தினம்(05) உக்ரைன் கைச்சாத்திட்டுள்ளது.

அதற்கு அமைவாக உக்ரைன் பல லட்சம் ட்ரோன்களை தயாரித்து பல ஐரோப்பிய நாடுகளுக்கு எற்றுமதி செய்ய உள்ளது. இதனூடாக பல மில்லியன் டாலர்களை உக்ரைன் வருவாயாக பெற உள்ளது. ஆனால் மறு முனையில் ரஷ்யா பெரும் தோல்வியை தழுவியுள்ளதோடு. பல இழப்புகளை சந்தித்து பெரும் நஷ்டத்தில் உள்ளது.