அதாவது உலகின் மிக முக்கிய செல்வந்தர் எலான் மஸ்க். ஆனால் உலகில் மிக முக்கிய அதிகாரம் மிக்கவர் ரம். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் போர் எங்கே போய் முடியும் ? சொல்லப் போனால் கமலா ஹரிசை எதிர்த்து ரம் போட்டியிட்ட வேளை , 75 மில்லியன் டாலர்களை வாரி இறைத்து ரம்புக்காக பணம் செலவு செய்தவர் எலான் மஸ்க். அந்த 75 மில்லியன் டாலர்களால் தான் ரம் ஆட்சியைப் பிடித்தார் என்பது வரலாறு.
ஆனால் எலான் மஸ்கிடம் அதனை பொல 20 மடங்கு பணம் உள்ளது. எனவே எலான் மஸ்க் பணத்தை மட்டும் நம்பி தற்போது தனது கட்சியை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் அவர் கொள்கைக்கு 5 மில்லியன் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள விடையம் , அமெரிக்க அரசியலை புரட்டிப் போட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
காலாதி காலமாக அமெரிக்காவில் 2 பெரிய கட்சிகளே உள்ளது. அவர்கள் 3வது கட்சி ஒன்றை வளர விட்டதே இல்லை. தாங்கள் சரமாரியாக அடித்துக் கொண்டாலும் 3வது கட்சியை உருவாக அவர்கள் விட்டதே இல்லை. ஆனால் அது இப்பொது நடக்கிறது.
எனவே எலான் மஸ்க் உருவாக்கும் கட்சிக்கு , பெரும் ஆதரவு கிடைக்க கூடும். இருப்பினும் ரம் இந்த கட்சியை தடை செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஏன் எனில் என்ன தான் கட்சியை ஆரம் பித்தாலும் எலான் மஸ்க் ஜனாதிபதி ஆக முடியாது. ஏன் எனில் அவர் ஒரு வந்தேறி குடி மகன். அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை.