இந்தியாவின் அகமதாபாத்தில் 275 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இந்திய மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரேயொரு பயணி மட்டுமே உயிர் தப்பிய நிலையில், மற்ற 241 பயணிகள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டது. தற்போது, இந்த விசாரணைக்குழு தங்கள் முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.