பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் பறவை மோதியதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பாட்னா விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 175 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.
பாட்னாவிலிருந்து டெல்லிக்கு 175 பயணிகளுடன் புறப்பட்ட இந்த இண்டிகோ விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் பறவை மோதியதால் சேதமடைந்தது. இதை அறிந்த விமானி, உடனடியாக நிலைமையைக் கட்டுப்படுத்தி, விமானத்தைப் பாதுகாப்பாக பாட்னா விமான நிலையத்திற்கே திருப்பித் தரையிறக்கினார்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பாட்னா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.