Posted in

தென்னிந்திய திரையுலகை உலுக்கிய சம்பவம்: 29 பிரபலங்கள் மீது வழக்கு!

தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ஒரு செய்தி. பிரபல முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என 29 திரைப்பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தச் செய்தி சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது, பொதுமக்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி மற்றும் ப்ரணிதா மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது அமலாக்கத்துறை. தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக விளம்பரம் நடித்துக் கொடுத்ததில் வந்தது இந்த வினை.

ரம்மி விளம்பரங்களே காரணம்!

இந்த வழக்கு பதியப்பட்டதற்கு முக்கிய காரணம், தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி விளம்பரங்களில் இவர்கள் நடித்ததுதான். சமீபகாலமாக, ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதிரடி நடவடிக்கை!

ரம்மி விளம்பரங்களில் நடித்த தென்னிந்திய சினிமாவின் முக்கியப் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பிரபலங்கள் தரப்பு விளக்கம்!

இந்த விளம்பரங்களில் நடித்த பல பிரபலங்கள், “நாங்கள் ஒப்பந்தம் போட்டுத்தான் இந்த விளம்பரங்களில் நடித்தோம். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

திரையுலகில் தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்து வரும் நிலையில், 29 பிரபலங்கள் மீது வழக்கு பதியப்பட்டது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை திரையுலகம் உற்று நோக்கி வருகிறது.