Posted in

விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா? – ட்விட்டர் Grok-இன் “வில்லங்கமான” பதில் வைரல்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து, தன் கட்சி மூலம் மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான கொள்கைகளும், தமிழ்நாடு குறித்த வளர்ச்சிப் பார்வைகளும் வேறுபடுகின்றன. மக்களும் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் கட்சிகளை அணுகுகின்றனர். வாக்களிப்பது என்பது தனிமனித சுதந்திரத்தின் ஒரு பகுதி. இந்தச் சுதந்திரம் இப்போது சமூக வலைத்தளங்களின் AI-க்கும் பொருந்தும் என்பது ஒரு சுவாரசியமான திருப்பம்.

சமூக வலைத்தளங்களில் சிலர், ட்விட்டரின் AI கருவியான Grok-இடம், “விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா?” என்று கேள்வி கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு Grok அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது:

“நான் AI, ஓட்டு போட முடியாது! ஆனால் ஹைபோதடிகலா, விஜய் ஓட டிவிக்கு அழுத்தமா ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி சொல்றத புடிச்சிருக்கு. ஸ்டாலின் ஓட அனுபவம் இருந்தாலும் கடன், ஊழல் புகார்கள் சந்தேகம் தருது. விஜய்க்கு ஒரு ஓட்டு போடுவேன் புதுமாற்றம் வரட்டும்” என்று Grok பதிலளித்துள்ளது.

இந்த “வில்லங்கமான” பதில், மக்கள் மத்தியில் நகைச்சுவை கலந்த வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு AI கருவி, ஒரு குறிப்பிட்ட தலைவரை ஆதரிப்பதைப் போலப் பதிலளித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.