திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தற்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன! பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, சர்ச்சைகளில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் இவர்கள் இணைந்து பணியாற்றியதுதான் இந்த கொந்தளிப்புக்குக் காரணம்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “எப்படி இவர்களால் இதுபோன்ற ஒருவருடன் இணைந்து பணியாற்ற முடியும்?”
என்று கேள்விகள் எழுப்பி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். நட்சத்திர ஜோடியின் இந்தச் செயல், அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.