ஹிருத்திக் ரோஷனின் அதிரடி வருகை: ‘வார்’ (WAR) பட பாணியில் பாதுகாப்பு!

ஹிருத்திக் ரோஷனின் அதிரடி வருகை: ‘வார்’ (WAR) பட பாணியில் பாதுகாப்பு!

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தந்திருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் (BIA) அவர் தரையிறங்கியபோது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு தனியார் நிகழ்வுக்காக வந்த ஒரு நட்சத்திரத்துக்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு ஏன் என்று பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொள்கின்றனர்.

முதலில், கொழும்பில் உள்ள புதிய மற்றும் பிரமாண்டமான ‘City of Dreams’ எனும் நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரது இடத்துக்கு ஹிருத்திக் ரோஷன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷனின் வருகை, அவரது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வார்’ படத்தில் வரும் காட்சிகளைப் போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியுள்ள ஹோட்டல் வரை பலத்த பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார். இது ஒரு சாதாரண நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அல்ல என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹிருத்திக் ரோஷன் வருகை தந்த ‘City of Dreams’ ஹோட்டல், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ஹோட்டலான இது, இலங்கையின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், ஷாருக்கானின் வருகை ரத்து செய்யப்பட்டாலும், ஹிருத்திக் ரோஷனின் அதிரடி வருகை, இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.