இலங்கையில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் இலங்கை திரும்பியுள்ளார்கள். இலங்கை பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு. இந்த 3 நபர்களையும் பிடித்து, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் கொழும்பு விமான நிலையத்திற்கு கை விலங்கோடு வந்து இறங்கிய 3 நபர்களையும் சி.ஐ.டி பொலிசார் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளார்கள். இவர்களின் பெயரையோ இல்லை இவர்கள் செய்த நிதி மோசடி தொடர்பாக எதனையும் பொலிசார் வெளியிடவில்லை.
குற்றச்செயல்களை புரிந்துவிட்டு, வடக்கிற்கு சென்று கள்ளத் தோணியில் இந்தியா சென்றுள்ளார்கள் இவர்கள். ஆனால் இந்தியாவில் பொலிசார் இந்த மூன்றுபேரையும் எப்படி கைது செய்தார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.