யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜேர்மன் நாட்டுப் பிரஜை ஒருவர் மரணம். திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு ஏற்பட்ட கிருமித் தொற்றே மரணத்திற்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நடராசா கேதீஸ்வரநாதன் (75 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா விசாரணைகளை மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளில், அடையாளம் காணப்படாத கிருமித் தொற்று காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.