குழந்தையை கொன்ற மிருகம்! – விபத்து நடந்த இடத்தில் 20 வயது இளைஞன் கைது!
- கென்ட், விட்பிள்பில் நகரின் கோரெல் டேங்க் கார் நிறுத்துமிடத்தில், நடந்த கோர விபத்தில், இரண்டு வயது பிஞ்சுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
- இந்த விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவசரகால சேவை ஊழியர்கள், உயிருக்கு போராடிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். குழந்தையுடன் காயமடைந்த ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.
- இந்த விபத்து குறித்து கென்ட்ஆன்லைன் (KentOnline) செய்தி வெளியிட்டுள்ளது.
- “பயங்கரமான விபத்தில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதாக தகவல் வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன” என தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- இந்த கோர விபத்துக்குக் காரணமான 20 வயது மதிக்கத்தக்க இளைஞனை, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- உயிரிழந்த குழந்தையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சிசிடிவி அல்லது டேஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் போலீசை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கென்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர்:
- “ஹார்பர் தெரு மற்றும் க்ரோம்வெல் சாலை சந்திப்பில், பல பாதசாரிகள் மீது கார் மோதியதாக ஆகஸ்ட் 16, 2025 சனிக்கிழமை இரவு 8.24 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்தது. ஒரு ஆண் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.”