உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி, 8 பேர் காயம் – குற்றவாளிகள் தப்பியோட்டம்!

உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி, 8 பேர் காயம் – குற்றவாளிகள் தப்பியோட்டம்!

நியூயார்க்கில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி, 8 பேர் காயம் – குற்றவாளிகள் தப்பியோட்டம்!

  • நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் உள்ள ‘டேஸ்ட் ஆஃப் தி சிட்டி’ (Taste of the City) என்ற உணவகத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பல துப்பாக்கிதாரிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
  • இந்த கொடூர தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக நியூயார்க் காவல்துறை (NYPD) ஆணையர் ஜெசிகா டிஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு குறித்து பல அவசர அழைப்புகள் வந்தன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், 11 பேரை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கண்டனர்.
  • உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்கள் (27, 35 வயது) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆண் அடங்குவர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
  • காயமடைந்தவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர், அவர்களின் வயது 27 முதல் 61 வரை இருக்கும். அவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • இந்த தாக்குதலுக்கு பல துப்பாக்கிதாரிகள் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இதுவரை எந்தவிதமான கைதுகளும் செய்யப்படவில்லை. குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்.
  • இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து 36 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு துப்பாக்கியும் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிக்கும் விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • நியூயார்க் நகரில் இந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாக ஆணையர் தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் ஒரு விதிவிலக்கான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று அவர் கூறினார்.