நியூயார்க், புரூக்ளின் கிளப்பில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி

நியூயார்க், புரூக்ளின் கிளப்பில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பரபரப்பான புரூக்ளின் பகுதியில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நியூயார்க் நேரப்படி நேற்று அதிகாலையில், புரூக்ளினில் உள்ள பிராங்க்ளின் அவென்யூவில் அமைந்திருந்த ஒரு உணவகத்திற்குள் பல துப்பாக்கியேந்திய நபர்கள் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 27 மற்றும் 35 வயதுடைய இரண்டு ஆண்களும், அடையாளம் உறுதிப்படுத்தப்படாத ஒருவரும் அடங்குவர்.

இந்த சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் யார், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.