Keir Starmer briefs Ukrainian on how not to upset the US President ரம்பை அப்-செட் ஆக்க வேண்டாம்: எப்படி பேசுவது என்று பாடம் எடுத்த கியர் ஸ்டாமர் !

Keir Starmer briefs Ukrainian on how not to upset the US President ரம்பை அப்-செட் ஆக்க வேண்டாம்: எப்படி பேசுவது என்று பாடம் எடுத்த கியர் ஸ்டாமர் !

அமெரிக்கா – வெள்ளை மாளிகை, ஆகஸ்ட் 18: இன்று உலக அரசியல் அரங்கில் நடக்கவிருக்கும் ஒரு அதிர்ச்சி திருப்பம், அனைவரையும் பரபரப்புடன் பேச வைத்துள்ளது. உக்ரைனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் ஒரு மணிநேர சந்திப்புக்காக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார்! கடந்த முறை நடந்த கசப்பான அனுபவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஐரோப்பியத் தலைவர்கள் ஜெலென்ஸ்கிக்கு அவசரம் அவசரமாகப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கடந்தமுறை வெள்ளை மாளிகையில் டிரம்ப் – ஜெலென்ஸ்கி இடையே நடந்த கடுமையான மோதலை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று ஜெலென்ஸ்கியை நேரடியாகக் குற்றம் சாட்டினார். இந்தப் பொது விவாதம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதன் விளைவாக, உக்ரைனுக்கான அமெரிக்க உதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. டிரம்ப் ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று ஐரோப்பியத் தலைநகரங்கள் நடுநடுங்கின.

இந்தமுறை, அத்தகைய ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜெலென்ஸ்கி தனியாக வரவில்லை. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஃபின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் உள்ளிட்ட பல முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் ஜெலென்ஸ்கியின் காட்ஃபாதர்களாக உடன் சென்றுள்ளனர். நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் இணைந்துள்ளனர். இந்தத் தலைவர்கள் அனைவரும், டிரம்ப்பை சமாதானப்படுத்தவும், அவரை உக்ரைன் பக்கம் திருப்பவும் ஒரு குண்டு மழை போல புகழாரங்களைச் சூட்டி வருகின்றனர். அண்மையில், நேட்டோ மாநாட்டில் மார்க் ரூட்டே, டிரம்ப்பை “அப்பா” (Daddy) என்று அழைத்தது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த சந்திப்பில், டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்னின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி ஜெலென்ஸ்கியை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புட்டினின் கோரிக்கைகள்:

  • கிரிமியா உட்பட சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • உக்ரைன் இனிமேல் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்று உறுதியளிக்க வேண்டும்.

இதற்கு ஜெலென்ஸ்கி ஏற்கனவே சம்மதிக்கப் போவதில்லை என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனால், இன்று நடக்கவிருக்கும் சந்திப்பு மிகவும் பதற்றமானதாக இருக்கும். இந்த சந்திப்பில் என்ன நடக்கும், உக்ரைனின் எதிர்காலம் என்னவாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உலகமே உற்றுநோக்கும் இந்த சந்திப்பு, போர் முடிவுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்குமா அல்லது புதிய குழப்பங்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.