Posted in

செம்மணியில் தொடரும் மர்மம்! மீண்டும் 2 சிறார்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இன்றும் இரண்டு சிறார்களின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான அகழ்வாராய்ச்சிப் பணிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை மாணவர்களின் பங்களிப்புடன் இன்றும் விறுவிறுப்பாக நடந்தேறியது. இந்த ஆய்வின்போது, இந்த மனம் பதறவைக்கும் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.

இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிறார்களின் எலும்புக் கூடுகளுடன், ஒரு சிறுமியின் ஆடை ஒன்றும் கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எஸ்.வி. நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த எலும்புக் கூடுகள் யாருடையது? இந்த ஆடை எதைக் குறிக்கிறது? செம்மணியின் மர்மம் எப்போது முடிவுக்கு வரும்? கேள்விகள் இன்னும் நீள்கின்றன!