தமிழ்நாட்டில இப்போ செம ஹாட் டாபிக் ‘ஜன நாயகன்’ படத்துக்கு விழுந்திருக்கிற தடைதான். ஆனா, இந்த மேட்டர்ல திமுக தரப்புல இருந்து ஒருத்தர் கூட மூச்சு விடமாட்டேங்குறாங்க. நேத்து கூட நம்ம பத்திரிகை நண்பர்கள் சீனியர் புள்ளி துரைமுருகனை ஓப்பனாகவே கேட்டுப் பார்த்தாங்க, அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி கனிமொழி கிட்டயும் நிருபர்கள் ஐடியா பண்ணி பேசிப் பார்த்தாங்க. ஆனா ‘நோ கமெண்ட்ஸ்’னு சிம்பிளா முடிச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க. யாருமே இந்த விவகாரத்துல தலையிடக் கூடத் தயாரா இல்ல.
ஆனா பாருங்களேன், திமுக கூட்டணியில இருக்குற காங்கிரஸ் காரங்க எல்லாம் ‘ஜன நாயகனுக்காக’ பயங்கரமா வாய்ஸ் கொடுக்குறாங்க. “அட, எதாச்சும் ஒரு கருத்த சொல்லிட்டு போங்கப்பா”ன்னு நம்ம கேட்டா, திமுக பிரமுகர்கள் ஒருத்தர் கூட ஜன நாயகன் பக்கம் தலை வச்சுப் படுக்கக் கூட ரெடியா இல்ல. என்னடா இது இப்படி ஒரு மௌனம்னு நமக்கு தெரிஞ்ச திமுக வட்டாரத்துல விசாரிச்சா, “எல்லாம் நம்ம உதய் போட்ட ஆர்டர் சார்”னு ஒரு குண்டைத் தூக்கி போடுறாங்க.
ஏற்கனவே இந்த கரூர் சம்பவத்துல லூசா பேசித்தான் நாங்க செமயா ‘வாங்கிக் கட்டிக்கிட்டோம்’. அதனால இப்போதைக்கு வாயை மூடிக்கிட்டு பேசாம இருக்கணும்னு உதயநிதி சார் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். அந்த “கண்டிஷனைத்தான்” இப்போ அறிவாலயமே ஃபாலோ பண்ணுது. இப்போ இந்தத் தடை பத்தி எதாச்சும் வாயைத் திறந்து, அதை நம்ம ஊரு ‘ஜென்-சி’ கிட்ஸ் தப்பா எடுத்துக்கிட்டு, “பார்த்தீங்களா… மத்திய அரசு கூட சேர்ந்து திமுகவும் படத்தை ரிலீஸ் பண்ண விடாம பண்ணுது”னு வதந்தியைக் கிளப்பி விட்டுடுவாங்களோன்ற பயம்தான் காரணம்.
என்னதான் மேலெழுந்தவாரியா அடங்கி இருந்தாலும், உதயநிதி சாருக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் கண்டிப்பா பொங்கி இருக்கும்னு உடன்பிறப்புகளே ரகசியமா பேசுறாங்க. ஒரு வழியா பொங்கலுக்கும் படம் வெளிய வரல, இப்போ தணிக்கைக் குழு மூலமாவும் படம் இழுத்தடிக்குதுன்னு அவர் ஒரு பெரிய ‘பெருமூச்சு’ விட்டிருப்பாரு. இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டத்துல கடைசியில ஜெயிக்கப் போறது யாருனு தான் இப்போ கோலிவுட்டே வெயிட் பண்ணிப் பாக்குது.
