கண்ணெதிரே நடந்த கோர விபத்து! விபரீதமான சாகசம்! திக்குமுக்காடிய மக்கள்!

கண்ணெதிரே நடந்த கோர விபத்து! விபரீதமான சாகசம்! திக்குமுக்காடிய மக்கள்!

இங்கிலாந்தின் Whitley Bay-இல் உள்ள ஸ்பானிஷ் சிட்டி சம்மர் ஃபன்ஃபேர் (Spanish City Summer Funfair) பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து, அங்கு வந்திருந்த குடும்பங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் கண்ணெதிரே, கேளிக்கை பூங்காவின் ஊழியர் ஒருவர், தான் இயக்கிவந்த ராட்டினத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இள வயது இளைஞனின் உயிரைப் பறித்த விபத்து!

கோரி லீ ஸ்டாவர்ஸ் (Corrie Lee Stavers) என்ற 28 வயது இளைஞர் தான் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.  அவர் ஒரு ராட்டினத்தை இயக்கி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவசர உதவி சேவைகளும், Great North Air Ambulance Service-ம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஆனால், மருத்துவ குழுவினரின் தீவிர முயற்சிக்கும் பலனின்றி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

இந்த விபத்து குறித்து நார்தம்பிரியா காவல் துறை (Northumbria Police) வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிட விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் தீவிர காயத்துடன் காணப்பட்டார். மருத்துவ குழுவினரின் முயற்சிக்கு மத்தியிலும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோகமான நேரத்தில் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஹெல்த் அண்ட் சேஃப்டி எக்ஸிக்யூட்டிவ் (HSE) உடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த கேளிக்கை பூங்கா மூடப்படுவதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது.

கோரி லீ ஸ்டாவர்ஸ்-ன் மறைவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் உருக்கமான இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். “எங்களது அன்புக்குரிய சகோதரன் கோரியை இழந்துவிட்டோம். அவரது மறைவு எங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றியுள்ளது. அவரது நினைவுகள் எங்கள் இதயத்தில் எப்போதும் வாழும்” என குடும்பத்தினர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.